Skip to main content

காணவில்லை காணவில்லை!! - முன்னாள் தலைமை செயலாளரை காணவில்லை

**காணவில்லை**
**காணவில்லை**
முன்னாள் தலைமை செயலாளரை காணவில்லை
முன்னாள் தலைமை தகவல் ஆணையரை காணவில்லை.
அரசு வழக்கறிஞர் தேடுகிறார், நீதிமன்றம் தேடுகிறது ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
கடைசியில் அவரை கண்டுபிடித்து கொடுக்கும்படி சட்ட பஞ்சாயத்து இயக்கத்திடம் நீதிமன்றம் கோரிக்கை வைத்துள்ளது.

நம்ப முடியவில்லையா? ஆனால் இது தான் உண்மை.
தகவல் ஆணையத்தில் மனு விசாரணையின் போது தலைமை ஆணையர் ஸ்ரீபதி மற்றும் ஆணையர் அக்பர் ஆகியோர் முன்னிலையில் சட்ட பஞ்சாயத்து இயக்க தலைவர் சிவ இளங்கோ நாற்காலியில் அமர்ந்து கொண்டு பதிலளித்தார் என்ற காரணத்தினால் காவல்துறையில் புகார் கொடுத்து அவரை 3 நாட்கள் புழல் சிறையில் அடைத்தனர். அந்த வழக்கு விசாரணை இது வரை 27 முறை நடந்துள்ளது. சிவ இளங்கோ சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அமர்ந்து கொண்டே தனக்காக வாதிடுகிறார். சம்பவம் நடந்த இடத்தில் இருந்த ஸ்ரீபதி மற்றும் அக்பர் ஆகிய இருவரையும் விசாரிக்க வேண்டும் என்று இளங்கோ வைத்த கோரிக்கையை நீதிபதி ஏற்றுக்கொண்ட போதிலும் அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியாததால் அவருக்கு சம்மன் அனுப்ப முடியவில்லை என்று தெரிவித்துவிட்டார்கள். இதையடுத்து அவர்கள் முகவரியை கண்டுபிடித்து கொடுத்தால் அவர்களுக்கு சம்மன் அனுப்பி வரவைக்கலாம் என்று நீதிமன்றம் ஜனவரி 9ம் தேதி முடிவு செய்துள்ளது.

மாநிலத்தில் தலைமை செயலாளராக இருந்தவரும், நீதிபதியாக இருந்தவரும் தற்பொழுது தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார்களா? இவர்கள் இருப்பிடம் பற்றி உங்களில் யாருக்கும் தெரிந்தால் உடனடியாக இயக்கத்துக்கு தகவல் கொடுக்க கேட்டுக்கொள்கிறோம்.